உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யூடியூப் வீடியோ பார்த்து கோடிக்கணக்கில் இழந்த மக்கள் | Business | Business Scam

யூடியூப் வீடியோ பார்த்து கோடிக்கணக்கில் இழந்த மக்கள் | Business | Business Scam

ருப்பூரை சேர்ந்தவர் வாசுதேவன். தன்னிடம் பல்வேறு தொழில் வாய்ப்புகள் இருப்பதாக யூடியூப் மூலம் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். பனியன் துணியில் இருந்து நூல் பிரிக்கும் மெஷின், கோன் வைண்டிங், பிளாஸ்டிக் அரவை மெஷின்களை நாங்கள் தயாரிக்கிறோம். 2 லட்சம் கொடுத்து மெஷின் வாங்கினால் தினமும் 1000 முதல் 2000 வரை வருமானம் வரும். மூலப்பொருட்களை கொடுத்து உற்பத்தி பொருளையும் நாங்களே வாங்கிக்கொள்கிறோம் என வீடியோவில் கூறியுள்ளார். 2 லட்சம் கொடுத்து மெஷின் வாங்க முடியாதவர்கள் 40 ஆயிரம் தந்தால் போதும், மீதியை தவணையாக கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார். சிறு தொகை முதலீடு செய்தாலே பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என நம்பி வந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பழுதடைந்த மெஷினை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைத்தனர். மெஷினை திரும்ப அவரிடமே கொடுத்துவிட்டு பணத்தை கேட்டுள்ளனர். பணமும் வரவில்லை. உற்பத்தி பொருளையும் திரும்ப வாங்கவில்லை. இப்படி தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ