இந்திய உளவு படையின் ரேஞ்சே வேற | Canada | Arsh Dalla Canada | RAW India
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் கடந்த 2023ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டான். நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறி வருகிறார். இதனால் இந்தியா- கனடா இடையிலான உறவுகள் சீர் குலைந்து இருக்கிறது. இந்நிலையில் இந்தியா தேடி வரும் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளான். கைது குறித்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத குற்றச்செயல்களை நடத்திய பயங்கரவாதி அர்ஷ் தல்லா கனடாவில் மனைவியுடன் தலைமறைவாக இருந்தான். அவனை கனடா சட்ட அமலாக்கத்துறை அமைப்புகள், ஹல்டன் பிராந்திய போலீஸ் பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். கனடாவின் மில்டன் நகரில் கடந்த அக்டோபரில் ஆயுத தாக்குதல் நடந்தது.