உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேமுதிகவினர் சோகம்; பண்ருட்டியில் நடந்த சம்பவம் captain vijayakanth | cuddalore nadukkuppam

தேமுதிகவினர் சோகம்; பண்ருட்டியில் நடந்த சம்பவம் captain vijayakanth | cuddalore nadukkuppam

விஜயகாந்த் பிறந்த நாள் விழா தேமுதிக நிர்வாகி திடீர் மரணம் டிஸ்க்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 40. தேமுதிக கிளைக்கழக துணைச் செயலாளர். விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஊரில் ஏற்பாடுகளை முன்னின்று செய்து வந்தார். நடுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் கட்சி நிர்வாகிகள் ஐந்து பேருடன் சேர்ந்து கொடிக்கம்பம் நடும் பணியில் வெங்கடேசன் ஈடுபட்டிருந்தார். இரும்பு கொடி கம்பத்தை வெங்கடேசன் தூக்கி நிமிர்த்தியபோது, மேலே சென்ற மின்கம்பியை கவனிக்கவில்லை. உடன் இருந்த தொண்டர்களும் பார்க்கவில்லை. மின்கம்பியில் கொடிக்கம்பம் பட்டதும் மின்சாரம் தாக்கி வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெங்கடேசன் தூக்கி வீசப்பட்டதால், பக்கத்தில் நின்றிருந்த கட்சி தொண்டர்கள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி