/ தினமலர் டிவி
/ பொது
/ சாலை பள்ளத்தால் பல்டி அடித்த கார்: தெலங்கானாவில் அதிர்ச்சி | Car accident | Telangana | 7 people die
சாலை பள்ளத்தால் பல்டி அடித்த கார்: தெலங்கானாவில் அதிர்ச்சி | Car accident | Telangana | 7 people die
தெலங்கானாவின் மெதக் மாவட்டம் இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா, தல்லபள்ளி தாண்டா கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் 8 பேர் உறவினர் வீட்டு கிரஹபிரவேசத்துக்காக காரில் புறப்பட்டனர். சிவம்பேட்டை அருகே சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கிய கார், நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி 4 முறை பல்டி அடித்து ஏரிக்கால்வாயில் கவிழ்ந்தது. இதில் 3 வயது அனிதா, 12 வயது அம்மு, 13 வயது ஷ்ரவாணி ஆகிய 3 சிறுமிகள், ஒரு சிறுவன், 3 பெண்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
அக் 16, 2024