உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரயில்களில் வரும் கார்கள்: GST குறைப்புக்கு பின் தலைகீழ் மாற்றம் | Car Carrier Shortage | PV Demand S

ரயில்களில் வரும் கார்கள்: GST குறைப்புக்கு பின் தலைகீழ் மாற்றம் | Car Carrier Shortage | PV Demand S

கார்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதனால் ஒரு சில கார்களின் விலை 1 லட்சம் வரை விலை குறைந்துள்ளது. வரி குறைப்பு அமலுக்கு வந்த செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொழிற்சாலைகளில் இருந்து டீலர்களுக்கு எடுத்துச் செல்லப் பயன்படும் கார் கேரியர் லாரிகளின் தட்டுப்பாடு புதிய நெருக்கடியை உருவாக்கி உள்ளது. சந்தையில் சுமார் 15,000 கார் கேரியர் லாரிகள் இயங்குகின்றன. ஒவ்வொன்றிலும் 6 முதல் 8 கார்களை ஏற்றிச் செல்ல முடியும். இதில் 2000 லாரிகள் வரை பழுதடைந்து பராமரிப்பில் உள்ளன. இப்போது திடீரென கார் விற்பனை அதிகரித்துள்ளதால் கார் ஏற்றி செல்லும் லாரிகளின் உரிமையாளர்கள் திணறுகின்றனர். இது தற்காலிக நெருக்கடி தான். விரைவில் மாற்று தீர்வுகள் எட்டப்படும் கார் நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AutoIndustry #CarShortage #LogisticsCrisis #SupplyChain #IndianAuto #PVsegment #CarCarrierShortage #PVDemandSurge #AutoLogistics #VehicleDelivery #GSTCutImpact #OEMSolutions

அக் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை