உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கார் பானட்டில் தொங்கிய ஏட்டு ஹவேசில் பரபரப்பு சம்பவம் ( Car Rams Cop, Speeds Off With Him Clinging

கார் பானட்டில் தொங்கிய ஏட்டு ஹவேசில் பரபரப்பு சம்பவம் ( Car Rams Cop, Speeds Off With Him Clinging

தமிழக கர்நாடக எல்லையில், ஒரு காரில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து உஷாரான போலீசார், தமிழக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அந்த வகையில் ஞாயிறன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனாலும் காரை நிறுத்தாமல் ஆசாமி வேகமாக ஓட்டிச்சென்றான் குறுக்கே புகுந்து, காரை நிறுத்த போலீஸ் ஏட்டு ராஜீவ் காந்தி முயன்றார். அவர் மீது கார் மோதியது. நிலைதடுமாறிய ஏட்டு காரின் பானட்டில் விழுந்துள்ளார் ஆனாலும் காரை நிறுத்தாமல் அந்த ஆசாமி ஓட்டிச்சென்றான். ஏட்டு ராஜிவ் காந்தி காரின் பானட்டை பிடித்துக்கொண்டு காரை நிறுத்தும்படி அலறினார் ஆனாலும் ஏட்டை பானட்டில் வைத்துக்கொண்டு 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிவேகமாக காரை ஆசாமி ஓட்டினான். இதனை மற்ற வாகனங்களில் வந்தவர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். . #CarRamsCop #SpeedingOff #Hosur #TamilNadu #KarnatakaBorder #Gutkha #ViralVideo #PoliceChase #CrazyIncidents #TrafficDrama #TNpolice #karnataka #tnborder #gutkha_seized #vehicleinspection #viralvideo

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை