கால்நடை வளர்ப்புக்கும் வரப்போகுது கார்பன் வரி | Carbon Tax | Denmark tax | Methane emission
பூமியின் வெப்பநிலையை அதிகரிப்பதில் கார்பன் வாயுவுக்கு அடுத்து மீத்தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. மாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் உணவை செரிக்கும் போது மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. வளி மண்டலத்தில் மீத்தேன் வாயு அதிகரிப்பதில் 30 சதவிகித பங்கு கால்நடைகளுக்கும் உள்ளது. இதை உணர்ந்த டென்மார்க் நாடு 2030 முதல் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கார்பன் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. 2030க்குள் கார்பன், மீத்தேன் போன்ற பசுமை இல்லா வாயுக்கள் வெளியேற்றத்தை 70 சதவிகிதம் குறைக்க டென்மார்க் அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு டேனிஷ் மாடு ஆண்டுக்கு 6 டன் கார்பன் வெளியேற்றத்துக்கு இணையான மீத்தேனை வெளியிடுகிறது. 2030ல் கால்நடை வளர்ப்பவர்களிடம் 1 டன் கார்பன் வெளியேற்றத்துக்கு 43 டாலர் வரி விதிக்கப்படும். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3500 ரூபாய் வரும். அப்படிபார்த்தால் ஒரு மாட்டுக்கு 21 ஆயிரம் கார்பன் வரி செலுத்த வேண்டி இருக்கும்.