கடத்தல் தடுப்பு வேட்டையில் ஆடிப்போன IT அதிகாரிகள் cash gold seized from abandoned car| bhopal
மத்திய பிரதேசம் போபாலில் உள்ள மெண்டோரி வனப்பகுதி வழியாக பணம் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. வருமான வரித்துறை மற்றும் போலீசார் இணைந்து அதை கைப்பற்றும் ஆபரேஷனில் ஈடுபட்டனர். மெண்டோரி வனத்தில் சல்லடை போட்டனர். அப்போது ஒரு கார் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சம்பந்தமே இல்லாமல் கார் நின்றதால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. கார் கதவுகளை திறந்தபோது அதிர்ந்து போயினர். காரில் இருந்த 6,7 பைகளில் கட்டுக்கட்டாக பணமும், தங்க கட்டிகளும் நிறைந்து இருந்தன. மொத்தம் 10 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது. 40 கோடி ரூபாய் மதிப்புள்ள 54 கிலோ தங்க கட்டிகளும் இருந்தன. கார் நம்பரை வைத்து அதன் ஓனரை கண்டுபிடித்தனர். அந்த கார் குவாலியரை சேர்ந்த சேத்தன் கவுர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. அவர் வருமான வரித்துறையின் டார்கெட் லிஸ்டில் இருப்பதும் தெரியவந்தது.