உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசு முடிவுக்கு ஏகோபித்த ஆதரவு Caste Census |Modi Cabinet |Political Parties| Opinions|

மத்திய அரசு முடிவுக்கு ஏகோபித்த ஆதரவு Caste Census |Modi Cabinet |Political Parties| Opinions|

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தமிழக தலைவர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, மத்திய அரசின் முடிவு, திமுக, இண்டி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. கொள்கை முடிவு எடுக்கவும், மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளவும், சமூக நீதி அளிக்கவும் ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக வந்ததும் அதை கைவிட்டது. 93 ஆண்டுக்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த முன்வந்திருப்பதை வரவேற்கிறேன் எனக்கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும்போது, சமூக நீதியை நிலைநாட்ட எடுத்த இந்த முடிவு சிறப்பானது. இது, பாமகவின் 30 ஆண்டு கோரிக்கை, முயற்சிக்கு கிடைத்த பலன் என கூறியுள்ளார் ராகுலின் தொடர் அழுத்தத்தால் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது ராகுலுக்கு கிடைத்த வெற்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி