காவிரி துலகாக்கட்டத்தில் ஒரே நேரத்தில் திரண்ட பக்தர்கள் | Cauvery kadaimuga theerthavari | Thulakatt
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையால் கருமை நிறம் அடைந்த கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராண வரலாறு சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுதும் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடாகி தீரர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இந்த துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி இன்று நடந்தது. மாயூரநாதர் கோயில், அய்யாறப்பர் சுவாமி, படித்துறை காசிவிஸ்வநாதர், தெப்பக்குள காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி தென்கரையில் எழுந்தருளினர். ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திககள் காவிரி வடகரையில் எழுந்தருளி அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தென்கரையில் திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் பூஜைகள் நடந்தது. பின்னர இரண்டு கரைகளிலும் தீர்த்தவாரி உற்சவம் ஒரே நேரத்தில் நடந்தது. திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.