உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொதுப்பணி அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு CBI Probe| PWS officials | Arrested |Karaikal - Puduch

பொதுப்பணி அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு CBI Probe| PWS officials | Arrested |Karaikal - Puduch

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பொதுப்பணி துறை சார்பில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை ஆய்வு செய்வதற்காக புதுச்சேரி அரசின் பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் தீன தயாளன் நேற்று காரைக்கால் சென்றார். மதியம் 2 மணி அளவில் அங்குள்ள அரசு ஹோட்டலில் தங்கினார். அவரை பார்க்க ஒப்பந்ததாரர்கள் வந்தனர். மன்னார்குடி TN INFRASTRUCTRES ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த இளமுருகு என்பவர், பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் தீனதயாளுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அப்போது, சிபிஐ அதிகாரிகள் திடீரென தீன தயாளன் அறைக்குள் நுழைந்து, கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர். காரைக்காலில் நடக்கும் வளர்ச்சிப்பணிகளை மன்னார்குடி கம்பெனியும் ஒப்பந்தம் எடுத்துள்ளது. அந்த வகையில் தலைமை பொறியாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிகிறது. இதே போல் மற்ற ஒப்பந்ததாரர்களிடமும் அவர் பணம் பெற்றாரா? என்பது பற்றி சிபிஐ விசாரிக்கிறது.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை