உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கெஜ்ரியிடம் 3 நாள் கஸ்டடியில் CBI விசாரித்தது என்ன | CBI vs Kejriwal | delhi liquor policy case

கெஜ்ரியிடம் 3 நாள் கஸ்டடியில் CBI விசாரித்தது என்ன | CBI vs Kejriwal | delhi liquor policy case

மதுபான ஊழல் தொடர்பான தங்கள் வழக்கிலும் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலிடம், அவரை கைது செய்ததற்கான உத்தரவு நகலை சிபிஐ வழங்கியது. தங்கள் வழக்கில் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை இருப்பதாக டில்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. மொத்தம் 5 நாட்கள் கஸ்டடி கேட்டது. ஆனால் கோர்ட் 3 நாள் கஸ்டடி வழங்கியது. அன்று முதல் சிபிஐ கஸ்டடியில் கெஜ்ரிவாலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. இன்று கஸ்டடி முடிந்த நிலையில், மீண்டும் அவரை ரோஸ் அவன்யூ கோர்ட்டில் சிபிஐ ஆஜர்படுத்தியது. அவரை நீதிமன்ற காவலில் சிறை வைக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது. இதை ஏற்று கெஜ்ரிவாலுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ