உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழிப்பாடம் குறித்து விளக்கம் |CBSE10thPublicExam

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழிப்பாடம் குறித்து விளக்கம் |CBSE10thPublicExam

தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதலின்படி, 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்கள், இரண்டு இந்திய மொழிகளையும் ஒரு அந்நிய மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டும் என, சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மூன்றாவது மொழிப் பாடத்திற்கான தேர்வு, 10வகுப்பு பொதுத்தேர்வுடன் இடம் பெறாது. எனினும், அந்தப் பாடத்தில் பள்ளி நடத்தும் அக மதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு 10ம்வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய விதி நடைமுறைக்கு வரும். எனினும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதலே இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 10ம் வகுப்பில் மூன்றாவது மொழி பாடத்திற்கான அகமதிப்பீட்டில் மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால், பொது தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக, பள்ளிகள் மறுமதிப்பீடு நடத்த வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் மூன்றாவது மொழி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 10ம் வகுப்பு பயில அனுமதிக்கப்படுவர். அதேசமயம் 10ம் வகுப்பில் படிக்கும் போது, 9ம் வகுப்பில் தோல்வியடைந்த மூன்றாம் மொழி தேர்வை மீண்டும் எழுதி, அகமதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ