/ தினமலர் டிவி
/ பொது
/ ஆசாமியின் துணிகரத்தை காட்டி கொடுத்த மூன்றாவது கண் | CCTV | chain snatching | Crime
ஆசாமியின் துணிகரத்தை காட்டி கொடுத்த மூன்றாவது கண் | CCTV | chain snatching | Crime
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சுதர்சன் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி, வயது 71. இவர் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்போது விஜயலட்சுமியை நோட்டம் போட்டு பைக்கில் பின் தொடர்ந்தார் ஒரு மர்ம நபர். சாலையில் ஆள் இல்லாத சமயம் பார்த்து விஜயலட்சுமியை நோக்கி ஓடிய அந்த ஆசாமி ஐந்து சவரன் நகையை பறித்து பைக்கில் ஏறி பறந்தார். விஜயலட்சுமி கூச்சல் போட்டும் பலனில்லை. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகின.
ஜூலை 09, 2024