கோவை ஹாஸ்டல்களில் அதிர்ச்சி சம்பவம் | CCTV | Coimbatore
கோவை, சரவணம்பட்டி, கீரணத்தம் பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் விடுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். வியாழனன்று அதிகாலை 3 மணிக்கு மர்மநபர் அங்குள்ள விடுதிகளுக்குள் சென்றுள்ளார். ஒவ்வொரு அறையாக சென்று கதவை திறந்து பார்த்து நோட்டமிட்டுள்ளார். சிசிடிவியில் முகம் தெளிவாக தெரியக்கூடாது என முகத்தை மறைத்துக்கொண்டே செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
மே 16, 2025