திருப்பதியில் வித்தியாசமாக நடந்த செல்போன் திருட்டு | Cellphone theft | Youth acting | CCTV
ஒரு செல்போனை திருட 2 பேர் நடத்திய நாடகம்! பரபரப்பு சிசிடிவி காட்சி ஆந்திராவின் திருப்பதி மாவட்டம் சீனிவாச மங்காபுரம் அருகே கட்டட மேஸ்திரி ஒருவர் அங்கு நடக்கும் அப்பார்ட்மென்ட் கட்டுமான பணிகளை பார்வையிட ஸ்கூட்டரில் வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த மற்றொருவர் கட்டடத்தின் முன்பு கொட்டப்பட்டிருந்த மணலில் சறுக்கி பைக் கீழே விழுவது போல் நின்றார். சத்தம் கேட்டு திரும்பிய கட்டட மேஸ்திரி ஓடிச்சென்று உதவினார். அவர் ஓடிவந்த அதே நேரம் அங்கிருந்த மின்கம்பம் அருகே நின்றிருந்த மற்றொருவரும் ஓடி வந்து உதவினார். பின்னர் அந்த இளைஞர் பைக்கை நிமிர்த்தி அங்கிருந்து புறப்பட்டபோது மின்கம்பம் அருகில் இருந்து ஓடி வந்த நபரும் அதே பைக்கில் ஏறினார். இளைஞருக்கு உதவிய திருப்தியோடு திரும்பிய கட்டட மேஸ்திரி சட்டை பாக்கெட்டில் கை வைத்தபோது செல்போன் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இளைஞருக்கு உதவியபோது தான் ஏதோ நடந்துள்ளதை உணர்ந்து திரும்பியபோது, இருவரும் வேகமாக பைக்கில் பறந்துவிட்டனர். உதவுவது போல் வந்த நபர் அந்த இளைஞரின் கூட்டாளி என்பதும், இருவரும் நாடகமாடி மேஸ்திரி பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடியதும் தெரிந்தது. இதுகுறித்து மேஸ்திரி சந்திரகிரி போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பியோடியவர்களை தேடுகின்றனர்.