உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இனி பிரசாரத்தில் என்ன பேசறது? அதிர்ச்சியில் அறிவாலயம் | Central Fund Allocation | Finance Commission

இனி பிரசாரத்தில் என்ன பேசறது? அதிர்ச்சியில் அறிவாலயம் | Central Fund Allocation | Finance Commission

மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், ‛‛பியூஸ் கோயல் அவர்களே, பாஜ ஆளும் மாநிலங்களைப் பாருங்க. அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கீங்க. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கொடுத்திருக்கீங்க. அப்போ தான் தமிழ்நாட்டை நீங்கள் எவ்வளவு வஞ்சிக்கிறீங்கன்னு தெளிவா புரியும். தமிழ்நாட்டு கடன் பத்தி பேசி இருக்கீங்களே. இன்று உங்களுக்கு ஒரு சேலஞ்ச் பண்றேன். தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுக்கிற ஒரு ரூபாய்க்குப் பதிலா திரும்ப எங்களுக்கு எவ்வளவு கிடைக்குது. அதுவே பாஜ ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்குது. இந்த கம்பேரிசனை வெளிப்படையா அறிவிக்க உங்களால் முடியுமா. சொன்னா உங்க குட்டு வெளிப்பட்டு விடும் என்றார். ஆனால் உண்மை நிலவரம் என்ன? மத்திய வருவாயில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு கொடுப்பார்கள் என்ற தகவல் பொதுவெளியிலேயே கிடைக்கிறது. 2026-27 நிதி ஆண்டுக்கு தமிழகத்திற்கு 87 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். #TamilNadu #CentralFunds #FinanceCommission #GST #TaxSharing #TNGovt #CentralGovt #TNPolitics #RevenueGap #Economy #TamilNaduNews #UnionBudget #StateRights #FiscalPolicy

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ