ஆந்திரா சட்டசபையில் மொழி சர்ச்சை பற்றி பேசிய சந்திரபாபு | Chandrababu | Andhra CM | Assembly speech
மும்மொழி கல்வியை உள்ளடக்கிய தேசிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறது. இதையே திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூறுகின்றன. ஆனால் பாஜ தலைவர்கள் இதை மறுத்து உரிய பதிலடி கொடுக்கின்றனர். தமிழகத்தை தாண்டி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் சமீபத்தில் மும்மொழி கல்விக்கு ஆதரவாக பேசி திமுகவினரை விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில சட்டசபையில் பேசினார். ஆங்கிலம் மட்டுமே அறிவுக்கு உத்தரவாதமான மொழி என்ற தவறான கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் மொழி என்பது தொடர்பு கொள்வதற்கு மட்டுமே; மொழியால் அறிவு வளராது. எந்த மொழியும் வெறுப்புக்குரியது அல்ல . ஆந்திராவை பொறுத்தவரை தாய்மொழி தெலுங்கு; ஹிந்தி தேசிய மொழி; ஆங்கிலம் சர்வதேச மொழி. தாய் மொழியில் கல்வி கற்பது எளிது. தாய்மொழி படித்தவர்கள் மட்டுமே உலகில் சிறந்து விளங்குகின்றனர். நம் வாழ்க்கையில் எத்தனை மொழியை கற்க முடியுமோ, அத்தனை மொழிகளை கற்கலாம். தேசிய மொழியை கற்றால், டில்லியில் தடையின்றி உரையாடலாம்.