உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமிக்கு படைக்கப்படும், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்க, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், தேவஸ்தானத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார். சந்திரபாபுவின் இந்த புகார் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, இது தொடர்பாக சிபிஐ சிறப்பு புலானய்வு குழு விசாரித்தது. சமீபத்தில் விசாரணைக் குழு அறிக்கையும் தாக்கலானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததற்கான ஆதாரம் இல்லை. எனினும், தாவர எண்ணெய் கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. 250 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என, விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டது. இது தொடர்பாக, 36 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ அறிக்கை பற்றி கருத்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அளித்த ஆய்வறிக்கையின் படியே, நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக நான் கூறினேன். எனினும் கலப்படம் நடந்தது உறுதியாகியுள்ளது. கடவுளுக்கான கைங்கர்யத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள் பாபம் செய்துள்ளனர். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்றார். இந்நிலையில், கர்னுால் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய சந்திராபாபு நாயுடு, திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியலறை ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ChandrababuNaidu| Tirupati| Tirumala| TTD| Laddu| TDP| YSRC| AndhraPolitics|

பிப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை