அதே பீச் அதே அலும்பு மெரினா ஜோடி பழைய வீடியோ | chandramohan old video | marina police viral video
டைம் என்ன தெரியுமா... நைட்டு 12:45 மணி; இப்ப இங்க என்ன வேலை? உடனே வீட்டுக்கு கிளம்புங்கனு போலீஸ் சொன்னதுக்கு தான் இவ்ளோ அலும்பு பண்ணி இருக்கு அந்த ஜோடி. போலீசை கெட்டவார்த்தைகளால் சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்த ஆசாமி தான் சந்திரமோகன். அவருடன் இருந்தது அவரது தோழி தனலட்சுமி. புல் போதையில் இவர்கள் செய்த அட்டகாசம் தொடர்பான வீடியோ தான் நேற்று தமிழகம் முழுதும் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் போலீஸ் மேல் மோதுவது போல் காரை ஓட்டி சிட்டாக பறந்த சந்திரமோகன், தனலட்சுமி ஜோடியை துரைப்பாக்கம் லாட்ஜில் தட்டி தூக்கியது மயிலாப்பூர் போலீஸ். முதல் நாள் உதயநிதியை இங்க கூப்டவா என்று உதார்விட்ட சந்திரமோகன் போலீஸ் பிடியில் பம்மினார். அவர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியானது.