காதலியை கைது செய்யக்கோரி திரண்ட உறவினர்கள் |Cheating girlfriend | Boy Family protest Mayiladuthurai
காதலித்து மோசம் செய்த பெண் குவைத்தில் காதலன் விபரீத முடிவு! தமிழகம் வந்த உடல்.. ஸ்தம்பித்த தலைஞாயிறு மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார் வயது 29. கடந்த 5 ஆண்டுகளாக குவைத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு முன் திருப்புங்கூரை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இப்போது காதலி சங்கீதா வைத்திஸ்வரன்கோவில் காவல் நிலைய எஸ்.ஐ ஒருவரை காதலிப்பதாக கூறி தன்னை நிராகரிப்பதால் வாழ பிடிக்கவில்லை என்று பெற்றோருக்கு கடந்த மாதம் ஆடியோ மெசெஜ் அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 29ம் தேதி சரத்குமார் குவைத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த சரத்குமாரின் தந்தை மணவாளன், தாய் சங்கீதா இருவரும் உறவினர்களுடன் சென்று மயிலாடுதுறை எஸ்.பி ஆபீசில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். 10 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணிற்கு சரத்குமார் அனுப்பி வைத்த 15 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் பணத்துடன் சேர்த்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும், நம்பிக்கை மோசடி செய்த சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.