உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாய்லர் வெடித்த விபத்தில் ஆலை துணை தலைவரும் மரணம் | Chemical factory blast | Telangana

பாய்லர் வெடித்த விபத்தில் ஆலை துணை தலைவரும் மரணம் | Chemical factory blast | Telangana

தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டம் பட்டன்சேரு தொழிற்பேட்டையின் பஷாமிலராம் என்ற இடத்தில் சிகாச்சி கெமிக்கல் பேக்டரி கடந்த 40 ஆண்டுகளாக செயல்படுகிறது. நேற்று காலை முதல் ஷிப்டில் வழக்கம் போல் 140க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. அதன் அருகே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் 100 மீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். தொழிற்சாலையின் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. கெமிக்கல், இயந்திரங்கள், விலை உயர்ந்த பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை