பாலத்தை மூடிய நுரை வாகனங்களுக்கு நோ என்ட்ரி
பனிப்பாறைகள் உருகி ஓடுவது போல் தோன்றும் இந்த காட்சியில் பார்ப்பது ரசாயன கழிவுகளால் உருவான நுரைகள். தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால், ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 4000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுகிறது. கெலவரப்பள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. தண்ணீரில் கலந்துள்ள ரசாயன கழிவுகள் பாலத்தில் மோதி, நுரையாக பொங்கி மலை போல் குவிந்துள்ளது. சுமார் 30 அடி உயரத்திற்கு நுரை மூடி இருப்பதால் அந்த இடமே மறைந்துவிட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பனி மலைபோல் தோற்றமளிக்கும் ரசாயன நுரைகள் முன் நின்று சிலர் செல்பி எடுத்து கொண்டனர்.
அக் 24, 2024