மோடி முன்பு ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய முதல்வர் |Chenab rail Bridge| PM Modi |CM Omar abdullah
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வளைவு ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து செனாப் நதியின் கிளை நதியான அன்ஜி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்மூலம் காஷ்மீரிலுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதைத் திட்டம் நிறைவு பெறுகிறது. நீண்ட காலமாக நடந்து வந்த இந்த ரயில் திட்டத்தின் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர் இடையே பயண நேரம் வெகுவாக குறையும். தொடர்ந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கத்ராவில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேசினார்.