தேசியக்கொடி தலைகீழாக ஏற்றி அமைச்சர் அவமரியாதை! | Chengalpattu | School Function | Minister Anbarasan
கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. செங்கல்பட்டு மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு அமைச்சர், கலெக்டர் தாமதமாக வந்தனர். மின்சாரமும் தடைபட்டதால் மாணவர்கள் இன்னும் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் விழா மேடைக்கு வந்து கொடி ஏற்றினர். அப்போதும் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளதாவது; அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பரசன் தாமதமாக கலந்து கொண்டதோடு, மின்சாரம் தடைபட்டதால் மாணவர்களை 1 மணி நேரம் காத்திருக்க செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் தேசிய கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூட தெரியாமல் அவமரியாதை செய்திருக்கிறார். அன்பரசனுக்கு தமிழ் மொழியில் பிழையின்றி எழுத தெரியாது என்பது ஏற்கனவே ஒரு பள்ளி நிகழ்ச்சியில் தெரிந்தது. தேசிய கொடி குறித்தும் எதுவும் தெரியாது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அமைச்சர் அன்பரசன் இனி கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது, நமது மாணவ செல்வங்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் என அண்ணாமலை கூறி உள்ளார்.