/ தினமலர் டிவி
/ பொது
/ மிரட்டிய கஞ்சா ஆசாமி: துணிச்சல் காட்டிய இளைஞர் | ganja man attacks 7 year old girl
மிரட்டிய கஞ்சா ஆசாமி: துணிச்சல் காட்டிய இளைஞர் | ganja man attacks 7 year old girl
செங்கல்பட்டு அருகே உள்ள மேலகண்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி. இவரது 7 வயது மகள் யாஷிகாவுக்கு காய்ச்சல் அடித்தது. அதனால் இன்று பள்ளிக்கு அனுப்பாமல் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது, மருதேரி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் வயது 35 மருத்துவமனைக்கு வந்தான். மருத்துவமனையில் உட்கார்ந்திருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்களிடம் வம்புக்கு இழுத்து சண்டை போட்டான். இதனால் கடுப்பான சிலர் ஏன்டா இப்படி அலப்பறை பண்றே.. வெளியே போடா என மணிகண்டனை திட்டியுள்ளனர்.
செப் 18, 2025