சென்னையில் இடிந்தது 3 மாடி கட்டிடம் Chennai | 60 year old building | Collapsed | MMC Hostel
நொடியில் இடிந்து விழுந்த 60 ஆண்டு பழைய கட்டிடம் 3 பேர் காயம் சென்னை பாரீஸ் கார்னர் பிராட்வே பஸ் நிலையம் எதிரே 60 ஆண்டுகள் பழமையான சென்னை மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதி கட்டிடம் உள்ளது. இந்த விடுதியை 1959ல் அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். மொத்தம் 342 அறைகள் கொண்ட இந்த விடுதியில் 430 பேர் தங்கும் வகையில் இடவசதி உள்ளது. 4.24 ஏக்கர் உள்ள இந்த இடத்தில் ஒருங்கிணைந்த கோர்ட் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. விடுதியில் இருந்த மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். கைவிடப்பட்ட அந்த கட்டடத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சுப்ரமணியன், சொக்கலிங்கம், விஸ்வநாதன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர்.