உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டு பாலியல் புகார் விசாரணை இறுதியில் ட்விஸ்ட் Chennai | Crime | Trichy | College Student

கூட்டு பாலியல் புகார் விசாரணை இறுதியில் ட்விஸ்ட் Chennai | Crime | Trichy | College Student

திருச்சியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி, படிப்பு விஷயமாக சென்னைக்கு சென்றுள்ளார். அடையாரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அந்த மாணவி, கடந்த 9ம் தேதி அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரில், விடுதியில் இருந்து வெளியே செல்வதற்காக ரேபிடோவுக்கு காத்திருந்தேன். அப்போது, காரில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர், வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். முகத்தில் மயக்க பவுடர் தூவியதால் சுயநினைவை இழந்தேன். அப்போது என்னை பாலியல் வன்கொடுமை செய்து அடையாறில் இறங்கிவிட்டு சென்றுவிட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என்று அந்த மாணவி கூறியிருந்தார். அந்த புகார் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். மாணவி கூறிய மருத்துவமயைில் விசாரித்தனர். மாணவியிடமும் துருவி துருவி விசாரித்தனர். இறுதியில், கல்லூரி மாணவி சொன்னது எல்லாமே கட்டுக்கதை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மாணவி படிப்பில் பின் தங்கியிருந்தார். மாணவியின் படிப்பு செலவுக்கு பெற்றோர் நிறைய செலவு செய்துள்ளனர். இருந்தாலும், மாணவிக்கு படிப்பு வரவில்லை. இதுகுறித்து பெற்றோரிடமும், சக நண்பர்களிடம் சொல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் இதுபோன்ற பொய் புகாரை கொடுத்ததாக போலீசில் மாணவி ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுகிறது. #Chennai #Crime #Student #sexualharassment #Fake #CollegeStudent #Police #CCTV #Trichy

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை