உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாய்களுக்கு எதிரான உத்தரவு: ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் | Chennai | Dog lovers | Agitation

நாய்களுக்கு எதிரான உத்தரவு: ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் | Chennai | Dog lovers | Agitation

டில்லியில் பல்வேறு இடங்களில் குழந்தைகளையும், வயதானவர்களையும் தெருநாய்கள் கடித்ததில் பலர் பாதிக்கப்பட்டனர். சிலர் இறந்தனர். இது குறித்து வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. 8 வாரங்களுக்குள் டில்லியில் உள்ள தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். அவற்றிற்கு தடுப்பூசி போடவேண்டும். எக்காரணம் கொண்டும் மீண்டும் தெருக்களில் நாய்களை விடக் கூடாது என டில்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 11 ம்தேதி உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விலங்குகள் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். சென்னையிலும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிரிஃப்பின் ராய் அறக்கட்டளை (Griffin ray foundation) உள்பட பல்வேறு விலங்குகள் நல அமைப்பின் சார்பில் புதுப்பேட்டையில் துவங்கிய பேரணியில், இயக்குநர் வசந்த், நடிகைகள் அபிராமி, வினோதினி வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நாய்களுக்கும் நீதி வேண்டும், நாய்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும் என பேரணியில் சென்றவர்கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆக 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ