உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுவனிடம் வேலை வாங்கிய மின்வாரிய ஊழியர்கள்! Chennai | EB employees | safety equipment

சிறுவனிடம் வேலை வாங்கிய மின்வாரிய ஊழியர்கள்! Chennai | EB employees | safety equipment

மின் பழுது நீக்கிய சுள்ளான் திருவொற்றியூர் மக்கள் ஷாக்! பெஞ்சல் புயல் காரணமாக சென்னை திருவொற்றியூர் மேற்கு ராஜாஜி நகர், இந்திராகாந்தி தெருவில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் கரண்ட் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை சற்று குறைந்ததால் மின் வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சிறுவன் ஒருவனும் கைகோர்த்தான். அவன் மொட்டை மாடியில் நின்று கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் வயர்களை லாவகமாக கையாண்டான். அவனது செயலை பார்த்து தெரு மக்கள் அச்சமடைந்தனர். சிறுவனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என பதறினர். ஆனால் மின் உழியர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சிறுவனிடம் வேலை வாங்கினர்.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ