உணவு டெலிவரி சென்ற இளைஞருக்கு நடந்தது என்ன? | chennai | ECR | Delivery Boy | Attack
சாவியை வைத்து வாய் கிழித்த கும்பல் 2 மணி நேரம் போராடிய டெலிவரிபாய் சொட்ட சொட்ட நின்ற சோகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் கணேஷ், வயது 21. சென்னை மேடவாக்கம் பகுதியில் டெலிவரிபாயாக வேலை செய்கிறார். திங்களன்று மாலை மேடவாக்கம் வடக்குப்பட்டு பகுதிக்கு சென்றுள்ளார். உடன் பணியாற்றும் நண்பர்கள் இரண்டு பேரும் அவருடன் கிளம்பினர். மறைவான இடத்தில் மூவரும் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளனர். உடன் வந்த இருவர் முன்கூட்டியே சென்றுவிட கணேஷ் கடைசியாக போனார். அப்போது அவரை மறித்த 6 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். என்னிடம் பணம் இல்லை என கணேஷ் கதறியும் அவரை விடவில்லை. இரண்டு மணி நேரம் சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். பைக் சாவியால் தலை, முகம், கை, கால்களில் குத்தியுள்ளனர். இதில் கணேஷின் உதடு கிழிந்தது, கை விரலில் காயம் உண்டானது. அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன், பைக்கை பறித்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கணேஷ் திரும்ப வராததால் அவரது நண்பர்கள் செல்போனில் அழைத்துள்ளனர். போன் எடுக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்து அங்கே வந்துள்ளனர். அப்போது ஒரு கும்பல் கணேஷை தாக்குவதை கண்டு சத்தம் போட்டபடி அருகில் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பி ஓடினர். கும்பலில் இருந்த 17 வயது சிறுவன் மட்டும் சிக்கின் கொண்டான். அவனை அடித்து உதைத்த அப்பகுதி மக்கள் மேடவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். கணேஷ் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய 5 பேரை மேடவாக்கம் போலிசார் தேடிவருகின்றனர்.