உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜோடியிடம் சிக்கி பதில் சொல்ல திணறும் போலீஸ் | Chennai | Marina Beach

ஜோடியிடம் சிக்கி பதில் சொல்ல திணறும் போலீஸ் | Chennai | Marina Beach

பீச்ல ஜோடியாவே உட்கார கூடாதா? தம்பதியான்னு எதுக்கு கேட்குறீங்க? சென்னை மெரினா கடற்கரை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். புதனன்று இரவு கடற்கரை மணலில் அமர்ந்திருந்த ஆண்,பெண் ஜோடியிடம் சென்ற போலீஸ்காரர் ஒருவர் நீங்கள் கணவன் மனைவியா? என கேட்டுள்ளார். ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க என கேள்வி எழுப்பினார். அப்போது அந்த ஜோடிக்கும், போலீஸ்காரருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. துவக்கத்தில் உரத்த குரலில் பேசிய போலீஸ்காரர், பதிலுக்கு அந்தப் பெண்ணும் உரத்த குரலில் கேள்விகளை எழுப்பியதால், பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். ஒரு பெண்ணும் ஆணும் பீச்சில் அமரக்கூடாதா? ஜோடியாக அமர்ந்திருந்தால் கணவன்- மனைவியா என்று கேட்பது நாகரிகமா? அப்படி எதுவும் சட்டம் இருக்கிறதா? பீச்சில் கணவன் மனைவி தான் உட்கார வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது என்று அந்த பெண் போலீஸ்காரரிடம் கூறினார். பதிலுக்கு அந்த போலீஸ்காரர் இன்று நான் உங்களிடம் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தனியாக இருப்பவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன் என்று இறங்கி பேசினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒரு வக்கீல் என்பது தெரியவந்துள்ளது. பட்டினப்பாக்கம் ரோந்து போலீஸ் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படி பொதுமக்களை மிரட்டும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை என பெண் வக்கீல் தனது சமூக வலைதள பதிவில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பெண் வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோந்து போலீஸ் ராஜ்குமார் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !