உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விசாரணை வளையத்தில் சிக்கிய அதிகாரிகள் | Chennai Airport | Customs | Dinamalar

விசாரணை வளையத்தில் சிக்கிய அதிகாரிகள் | Chennai Airport | Customs | Dinamalar

சென்னை ஏர்போர்ட்டில் கடந்த 60 நாட்களில் 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏர்போர்ட்டில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர் சபீர் அலி, பணியாளர்கள் உட்பட 9 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். கடத்தி வரப்பட்ட 267 கிலோ தங்கம், யார் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, யாரிடம் கொடுத்தனர், எங்கே பதுக்கி வைத்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட ஏர்போர்ட் வணிக பிரிவு உயரதிகாரி ஒருவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கடத்தலில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: யூ டியூப் சேனல் நடத்தி வரும் முகமது சபீர் அலி, ஏர்போர்ட்டில் கடை நடத்த, கடைகளுக்கான உரிமைம் பெற்ற வித்வேதா பிஆர்ஜி நிறுவனத்துக்கு 77 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். அது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்துள்ளது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை