/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை ஏர்போர்ட்டில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்! | chennai airport | drug seized | Customs
சென்னை ஏர்போர்ட்டில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்! | chennai airport | drug seized | Customs
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 2 நாட்களுக்கு முன் சென்னை ஏர்போர்ட் வந்த விமான பயணிகளை கஸ்டம் அதிகாரிகள் கண்காணித்தனர். ஒரு ஆண் பயணியின் நடத்தையில் சந்தேகம் வந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் 1 கோடி மதிப்புடைய, 971 கிராம் உயர் ரக கஞ்சா சிக்கியது. விசாரணையில் அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிந்தது. இந்த கும்பலை சேர்ந்த மற்றொரு பயணி சென்னைக்கு பெருமளவு கஞ்சா கடத்தி வரும் தகவலும் அதிகாரிகளுக்கு கிடைத்தது. நேற்று மோப்பநாய் உதவியுடன், தாய்லாந்திலிருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர்.
மே 30, 2025