/ தினமலர் டிவி
/ பொது
/ தொடர்ந்து ஏர்போர்ட்டில் சிக்கும் பல கோடி உயர் ரக கஞ்சா! | High grade cannabis seized | Thailand
தொடர்ந்து ஏர்போர்ட்டில் சிக்கும் பல கோடி உயர் ரக கஞ்சா! | High grade cannabis seized | Thailand
தாய்லாந்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் உயர் ரக கஞ்சா கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. சமீப நாட்களாக பல கோடி மதிப்பு கஞ்சா சிக்கியும் ஆட்டம் அடங்கவில்லை. கடத்தல் குருவிகளாக சிக்கும் நபர்களிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இதன் பின்னணியில் மூளையாக செயல்படும் முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இன்றும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பகல் 12 மணி அளவில் சென்னை வந்த விமான பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. சென்னையை சேர்ந்த அந்த 35 வயது ஆண் பயணி டூரிஸ்ட் விசாவில் சென்று சென்னை திரும்பி இருந்தார்.
அக் 25, 2025