சென்னையை உலுக்கிய சம்பவம்! 5 பேர் மீது வழக்கு | Chennai Ayanavaram | DMK | College Student
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயதான நித்தின் சாய். மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நித்தின் நேற்று இரவு நண்பர் அபிஷேக் உடன் பைக்கில் சென்றுள்ளார். திருமங்கலம் பள்ளி சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மோதியது. அபிஷேக் மற்றும் நித்தின் தூக்கி வீசப்பட்டு நித்தின் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருமங்கலம் போலீசார் நித்தின் சாய் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அபிஷேக்கை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வந்தனர். இது விபத்து இல்லை கொலை என நித்தின் சாய் குடும்பத்தினர் கூறினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திட்டமிட்டு காரில் வந்து மோதியது தெரிந்தது. நித்தின் சாய் நண்பர்களிடம் விசாரித்தனர். கேகேநகர் பகுதியைச் சேர்ந்த பிரணவ் என்ற கல்லூரி மாணவன், அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார், மாணவியிடம் வெங்கடேஷ் என்ற கல்லூரி மாணவனும் பேசிவந்துள்ளார். இதனை மாணவி பிரணவிடம் கூறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.