வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சீக்கிரமா போய் என்ன பண்ண போறாங்க, போய் பட்டாசு வெடித்து இயற்கையை நாசம் செய்வார்கள்
சென்னை - பெங்களூரு Express Way: இவ்வளவு தாமதம் ஏன்? | Chennai Bangalore Expressway Tender
இருந்த தடைகள் நீங்கியது இரண்டே மணி நேரத்தில் சென்னை டு பெங்களூரு! டைட்டில்: சென்னை - பெங்களூரு Express Way: இவ்வளவு தாமதம் ஏன்? | Chennai Bangalore Expressway Tender | NHAI Expressway Project தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை - பெங்களூரு நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு சாலை அமைக்கப்படுகிறது. ஆறுவழிசாலையாக அமைக்க கடந்த 2012 ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 263 கி.மீ., விரைவு சாலை திட்டத்தில், தமிழகத்தில் 106 கி.மீ., கர்நாடகாவில் 71.7 கி.மீ., ஆந்திராவில் 85.2 கி.மீ அமைகிறது. இதுவரை, 230 கி.மீ., துாரம் சாலை பணிகள் முடிந்துள்ளன. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பணிகள் முடிந்து விட்டன. தமிழகத்தில், 106 கி.மீ., துாரத்தில், இதுவரை 92 கி.மீ., பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. மீதமுள்ள 14 கி.மீ., துாரத்துக்கான பணிகள், 614 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது, சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை திட்டத்தில், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் முடிந்து விட்டன.
சீக்கிரமா போய் என்ன பண்ண போறாங்க, போய் பட்டாசு வெடித்து இயற்கையை நாசம் செய்வார்கள்