சென்னையில் 1 மணி நேரத்தில் கொட்டிய பேய் மழை | Chennai cloudburst | heavy rain | Chennai rain
சென்னை, காஞ்சிபுரம் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது. மணலி, கொரட்டூர், வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. மேலும், எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர், சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலையிலும் பலத்த மழை பெய்தது. ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் திணறினர். சென்னையில் இந்தாண்டின் முதல் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறினர். சென்னையை போல திருப்பதி திருமலையிலும் விடாமல் கன மழை கொட்டி தீர்த்தது. பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.