உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை மாநகராட்சி அறிவிப்பு: அஸ்வின் ரசிகர்கள் மகிழ்ச்சி Chennai corporation | Cricketer Aswin Name

சென்னை மாநகராட்சி அறிவிப்பு: அஸ்வின் ரசிகர்கள் மகிழ்ச்சி Chennai corporation | Cricketer Aswin Name

சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 14 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். 106 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 537 விக்கெட்டுகள் எடுத்து சாதித்திருக்கிறார். கடந்தாண்டு டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகளுக்காக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்திருக்கிறது. ஐபிஎல்லில் விளையாடி வரும் அஸ்வின், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியையும் அளித்து வருகிறார். சென்னை, மேற்கு மாம்பலம், ராமகிருஷ்ணபுரம் 1-வது தெருவில் அவரது வீடு உள்ளது.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !