உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிகிச்சையில் தவறு என நான் சொல்லவே இல்லை Chennai Doctor Stabbed doctor chennai doctor attack dr. bala

சிகிச்சையில் தவறு என நான் சொல்லவே இல்லை Chennai Doctor Stabbed doctor chennai doctor attack dr. bala

கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் டாக்டர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கடந்த 13ம்தேதி கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிண்டி ஆஸ்பிடலில் டாக்டர் பாலாஜி அளித்த சிகிச்சையால்தான் அம்மாவுக்கு பக்கவிளைவு ஏற்பட்டு இருக்கிறது என தனியார் டாக்டர் சொன்னார். அம்மாவின் நிலைமைக்கு காரணமான டாக்டரை சும்மா விடக்கூடாது என்பதற்காக வீட்டில் இருந்து கத்தியை எடுத்துச் சென்று டாக்டரை 7 முறை குத்தினேன் என விக்னேஷ் வாக்குமூலம் அளித்தார். சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் மீது கிண்டி போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி விக்னேைஷ சிறையில் அடைத்தனர். கத்தி குத்துபட்ட டாக்டர் பாலாஜியும் அபாய கட்டத்தை தாண்டிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ