உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிஎஸ்பி தூக்கியடிக்கப்பட்டதன் பகீர் பின்னணி | Chennai Encounter | Police DSP

டிஎஸ்பி தூக்கியடிக்கப்பட்டதன் பகீர் பின்னணி | Chennai Encounter | Police DSP

காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்துாரி கொல்லப்பட்டார். இது தொடர்பாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த மதிமுக முன்னாள் மாவட்ட செயலர் வளையாபதி, அதிமுக பிரமுகர் பிரபு கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினர். இதேபோல சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின் ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை