உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்பை புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு | Chennai Flight | Flight Delay | Mumbai Flight

மும்பை புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு | Chennai Flight | Flight Delay | Mumbai Flight

ென்னையில் இருந்து மும்பை செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 8.30க்கு புறப்பட தயாரானது. 185 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 192 பேர் அதில் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்குவதற்கு முன் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். முதலில் காலை 10.30க்கு விமானம் கிளம்பும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பழுது பார்க்கும் பணி முடியாததால் 11 மணி ஆகியும் புறப்படவில்லை. பயணிகள் கவுண்டரை சூழ்ந்து கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். பயணிகள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு போன்றவைகள் செய்யப்பட்டது. பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் அமைதிப்படுத்தினர். மாலை 5.30க்கு விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 9 மணி நேரம் பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதே நேரம் இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து அசம்பாவிதத்தை தவிர்த்த விமானிக்கு பாராட்டு குவிகிறது. #FlightLate | #ChennaiFlight | #FlightDelay | #MumbaiFlight | #Malfunction

ஜன 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை