பள்ளி, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Chennai heavy rain| Chennai flood|
காலை முதல் கொட்டும் மழை சென்னை புறநகர் மக்கள் அவதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்கிறது. திருவொற்றியூரில் பெய்த மழையால், அரசு பஸ் டெப்போவில் மழை நீர் குளம் போல் தேங்கியது. டெப்போவில் இருந்து பஸ்கள் வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டது. பூந்தோட்ட தெருவில் உள்ள அரசு பள்ளி, கல்லுாரி, வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வட சென்னையின் ராயபுரம், தண்டையார்பேட்டை, மணலி, எண்ணுார் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் மக்கள் சிரமமடைந்தனர். புறநகர் பகுதியான பூந்தமல்லி காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் பகுதிகளில் காலை பெய்த கனமழையால் பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதித்தனர். பூந்தமல்லி மேல்மாநகர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.