9,445 கோடிக்கான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு | chennai Metro Rail | Airport to Kilambakkam Metro
சென்னையில் இப்போது 54 கிமீ துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் புறநகர் பஸ் ஸ்டாண்ட் வந்ததில் இருந்து அதுவரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 15.5 கிமீ வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும் என 2018ல் அரசு அறிவித்தது. இந்த தடத்தில் நெடுஞ்சாலையின் மேம்பாலம் அமைய இருந்ததால், பாலம் வடிவமைப்பு மற்றும் நிலம் ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. மாநில நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி சிறு திருத்தங்களுடன், விரிவான புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தலைமை செயலகத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் சமர்ப்பித்துள்ளார்.