உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் நடக்க இருந்த சம்பவம்: வெளியான பகீர் பின்னணி | Alphazid | Chennai NIA Raid | ISIS

சென்னையில் நடக்க இருந்த சம்பவம்: வெளியான பகீர் பின்னணி | Alphazid | Chennai NIA Raid | ISIS

சென்னை மற்றும் மயிலாடுதுறையில் ஜனவரி 28ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை சேர்ந்த மூன்று மாநில என்ஐஏ டீம் இந்த சோதனையில் ஈடுபட்டது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நெருக்கம் காட்டி வந்தது, அந்த அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக சோதனை நடந்தது. சென்னையை பொறுத்தவரை புரைசவாக்கம் உட்பட 5 இடங்களில் தனித்தனியாக என்ஐஏ டீம் சல்லடை போட்டது. மயிலாடுதுறையில் திருமுல்லைவாசல் மெயின்ரோடு, நடுத்தெரு, எம்ஜிஆர் நகர், எல்லைக்கட்டி இருப்பு தெரு பகுதிகள் என 15 இடங்களில் சோதனை நடந்தது. சென்னை புரசைவாக்கத்தில் நடந்த சோதனையில் அல்பாசித் (Alphazith) என்பவனை கைது செய்தனர். இந்த ரெய்டு பற்றியும் அல்பாசித் பற்றியும் பல திடுக்கிடும் தகவல்களை என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டனர். அல்பாசித்தை மையப்படுத்தி தான் இவ்வளவு பெரிய ரெய்டை நடத்தினோம். அவனது சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல். சென்னை புரசைவாக்கத்தில் தங்கி இருந்தான். இங்குள்ள ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தான். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததையும், பெரிய அளவில் ஆள் சேர்க்கும் படலத்தில் ஈடுபட்டு வந்ததையும் கண்டுபிடித்தோம். ஐஎஸ் அமைப்புக்கு ஆள் திரட்ட வாட்ஸ்ப் குழு ஆரம்பித்து அதிலேயே மூளைச்சலவை செய்திருக்கிறான். டெலிகிராமிலும் இதே வேலையை பார்த்து இருக்கிறான். கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை தான் அல்பாசித் குறிவைத்துள்ளான். அவன் யார் யாரை எல்லாம் மூளை சலைவை செய்தானோ அவர்களையும் என்ஐஏ ராடாரில் கொண்டு வந்து இருக்கிறோம்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை