இந்திய தேசிய லீக் வடசென்னை மா.செ கைது | Chennai Police | NIA
சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் முகமது சலாவுதீன், வயது 30. இந்திய தேசிய லீக் கட்சியில் வட சென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இவரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2018ல் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். சென்னை போலீஸ், என்ஐஏ அதிகாரிகளின் ரகசிய கண்காணிப்பில் இருந்தார். சில வருடங்கள் அமைதியாக இருந்த சலாவுதீன் சமீபத்தில் புரசைவாக்கத்தை சேர்ந்த முகமது அலாவுதீன் என்பவரை மிரட்டினார். அலாவுதீன் இஸ்லாமியர்களுக்கான அறக்கட்டளை நடத்தி வருகிறார். அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு அருகே உள்ளது.
நவ 05, 2024