உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குரோம்பேட்டையில் பரபரப்பு சட்ட மாணவி, கணவர் கைது | Bus Driver Conductor | law student |

குரோம்பேட்டையில் பரபரப்பு சட்ட மாணவி, கணவர் கைது | Bus Driver Conductor | law student |

சட்ட மாணவி செய்த சம்பவம் டிரைவர், கண்டக்டர் பரிதாபம் திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு தடம் எண்-91V மாநகர பஸ் நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அசோக் குமார் (40) டிரைவராகவும், இருசப்பன்( 24) நடத்துனராகவும் இருந்தனர். மதியம், 2:30 மணி அளவில் குரோம்பேட்டை பஸ் நிறுத்தத்துக்கு பஸ் சென்றது. பஸ்சை நிறுத்தும் இடத்தில் ஒரு கார் நின்றிருந்தது. டிரைவர் அசோக்குமார் ஹார்ன் அடித்தும் யாரும் காரை எடுக்காததால், பஸ்சை அசோக் குமார் தொடர்ந்து ஓட்டிச் சென்றார். அப்போது, பஸ்சின் பின் பகுதி லேசாக கார் மீது உரசியதாக கூறப்படுகிறது. உடனே ஒரு பெண் உள்பட 4 பேர் ஓடிவந்தனர். பஸ்சில் ஏறி டிரைவரிடம் தகராறு செய்தனர். டிரைவரை பஸ்சிலிருந்து கீழே இழுத்து தாக்கியுள்ளனர். அதை கண்டக்டர் செல்போனில் படம் எடுத்ததால் அவரையும் தாக்கியுள்ளனர்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி