பொதுப்பணிதுறை அதிகாரிகள் கொடுத்த அப்டேட் | Chennai rain | Chembarambakkam Lake
தொடர்ந்து கனமழை கொட்டினால் செம்பரம்பாக்கம் ஏரி என்ன ஆகும்? சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2015க்கு பிறகு ஒவ்வொரு முறை கனமழையின் போதும் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி கவனம் பெறுகிறது. 2015 கனமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதே சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க காரணமானது. அந்த சம்பவத்தை பாடமாக கொண்டு ஒவ்வொரு முறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைக்கு முன்னாதே செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறந்துவிடப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் 23 அடி வந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம். இப்போது ஏரியின் நீர்மட்டம் 13 அடி மட்டுமே உள்ள நிலையில் இன்னும் ஏரி நிரம்ப 10 அடி தேவைப்படும். தொடர்ந்து மழை பெய்தாலும் முழு கொள்ளளவை எட்டாது என பொதுப்பணிதுறை அதிகாரிகள் கூறினார்.