நள்ளிரவில் சென்னையை புரட்டி போட்ட மிக கனமழை | Chennai Rain | Heavy Rain | IMD
ஒரே இரவில் கொட்டிய 30 செ.மீ மழை தத்தளித்த தலைநகர் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் நேற்று இரவு 7 மணி முதல் கனமழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் பல இடங்களில் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. முதலில் வட சென்னை பகுதியில் மழை துவங்கி பின் மத்திய மற்றும் தென் சென்னையிலும் தொடர் மழை பெய்தது. பாரிமுனை, கத்திவாக்கம் பகுதிகளில் 30 செமீ வரை மழை பதிவாகியிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர், கிண்டி, நங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி மற்றும் ஈசிஆர் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருந்தது.