உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூழ்கிய ரோடுகள், மிதக்கும் சுரங்க பாதை: சென்னையை மிரட்டும் மழை | Chennai rain | Rain alert

மூழ்கிய ரோடுகள், மிதக்கும் சுரங்க பாதை: சென்னையை மிரட்டும் மழை | Chennai rain | Rain alert

இரவில் பெய்த மழைக்கே மிதக்கிறது வட சென்னை சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. வடசென்னைக்குட்பட்ட புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெரு, பெரம்பூர் ஏஏ, ரோடு பெரம்பூர் பிபி ரோடு, வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை, கணேசபுரம் மேம்பாலம் அருகே உள்ள சில பகுதிகள் என பல இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றது. வியாசர்பாடி, சர்மா நகர், கொடுங்கையூரில் சில பகுதிகளும் வெள்ளக்காடானது. மாநகராட்சி பணியாளர்கள் அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவொற்றியூர் மாணிக்க நகர் ரயில்வே சுரங்க பாதையில் 2 அடி அளவுக்கு வெள்ளம் தேங்கி நின்றது. அதனை கடக்க முடியாமல் மக்கள் தண்டவாளங்களில் ஏறி நடந்து சென்றனர்.

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை